தமிழன்
பிறக்கும் போதே பெருமையோடு
பிறந்தவன் தமிழன் - தமிழ்ப்
பெருங்குடி தன்னிற் பிறந்தவன் ஆதலால்
- பிறக்கும் போதே .....
இறப்பதே இல்லை தமிழன் - புகழுடம்பை
எங்குமே வைத்தது காண்க
மறக்குமோ வையம் தமிழன் - மனப்பாங்கு
வளர்த்த அறத்தையும் அறிவையும் ?
சிறப்பதென்றால் தமிழாற் சிறக்க வேண்டும்
தீர்வதென்றால் தமிழ் மறந்து தீர்தல் வேண்டும்
- பிறக்கும் போதே .....
முதலில் தோன்றிய மனிதன் தமிழன்
முதல் மொழி தமிழ் மொழி - ஆதலால்
புது வாழ்வின் வேர் தமிழர் பண்பாடே
- பிறக்கும் போதே .....
முதுகிற்புண் படாதவன் தமிழன் - போர் எனில்
மொய்குழல் முத்தமென் றெண்ணுவான்
மதிப்போடு வாழ்பவன் தமிழன்
வாழ்வதற்கென்று வாழ்பவன் அல்லன்.
- பிறக்கும் போதே .....
நாம் தமிழர் என்று பாடு
நாம் பிறந்தது நாம் வளர்ந்தது தமிழ்நாடு - தமிழா
நாம் தமிழர் நாம் தமிழர் என்று பாடு !
போம்படி சொல் அயலாட்சியைப் பொழுதொடு
-விரைவில்
போகாவிட்டால் அறிவார் அவர் படும்பாடு.
நாமறிவோம் உலகத்தில் நம் பண்பாடு - தமிழா
நாம்தமிழர் நம்திறத்துக் கெவர் ஈடு ?
தீமை இனிப் பொறுக்காது நம் தமிழ்நாடு - நாம்
தீர்த்துக் கொண்டோம் அவர் கணக்கை இன்றோடு !
மூவேந்தர் முறை செய்தது நம் தமிழ்நாடு - தாய்
முலைப் பாலொடு வீரம் உண்டது செந்தமிழ் நாடு
கோவிலுக்குள் வேண்டாம் பிறர் தலையீடு - பகை
குறுகுறுத்தால் பொறுக்காதெம் படை வீடு !
நாவலரும் காவலரும் ஆண்டதிந்நாடு - நிமிர்ந்து
நாம்தமிழர் நாம்தமிழர் என்று பாடு!
நாவைப்பதா நம் சோற்றில் கோழிப்பேடு ? - தமிழா
நாம்தமிழர் நாம்தமிழர் என்று பாடு !
முத்துக் கடல் முரசறையும் முத்தமிழ் நாடு - நீ
முன்னேறுவாய் தமிழ் மறவா ஒற்றுமையோடு
நத்துவதை ஒப்பிடுமா நம்வீடு மறவா
நாம்தமிழர் நாம்தமிழர் என்று பாடு !
தத்தும் தவளைக் கிடமா முல்லைக்காடு - நம்
தமிழகத்தில் கால்வைப்பதா இந்திப்பேடு
நத்தை உறவாடுவதா சிங்கத்தோடு - தமிழா
நாம்தமிழர் நாம்தமிழர் என்று பாடு!
பிறக்கும் போதே பெருமையோடு
பிறந்தவன் தமிழன் - தமிழ்ப்
பெருங்குடி தன்னிற் பிறந்தவன் ஆதலால்
- பிறக்கும் போதே .....
இறப்பதே இல்லை தமிழன் - புகழுடம்பை
எங்குமே வைத்தது காண்க
மறக்குமோ வையம் தமிழன் - மனப்பாங்கு
வளர்த்த அறத்தையும் அறிவையும் ?
சிறப்பதென்றால் தமிழாற் சிறக்க வேண்டும்
தீர்வதென்றால் தமிழ் மறந்து தீர்தல் வேண்டும்
- பிறக்கும் போதே .....
முதலில் தோன்றிய மனிதன் தமிழன்
முதல் மொழி தமிழ் மொழி - ஆதலால்
புது வாழ்வின் வேர் தமிழர் பண்பாடே
- பிறக்கும் போதே .....
முதுகிற்புண் படாதவன் தமிழன் - போர் எனில்
மொய்குழல் முத்தமென் றெண்ணுவான்
மதிப்போடு வாழ்பவன் தமிழன்
வாழ்வதற்கென்று வாழ்பவன் அல்லன்.
- பிறக்கும் போதே .....
நாம் தமிழர் என்று பாடு
நாம் பிறந்தது நாம் வளர்ந்தது தமிழ்நாடு - தமிழா
நாம் தமிழர் நாம் தமிழர் என்று பாடு !
போம்படி சொல் அயலாட்சியைப் பொழுதொடு
-விரைவில்
போகாவிட்டால் அறிவார் அவர் படும்பாடு.
நாமறிவோம் உலகத்தில் நம் பண்பாடு - தமிழா
நாம்தமிழர் நம்திறத்துக் கெவர் ஈடு ?
தீமை இனிப் பொறுக்காது நம் தமிழ்நாடு - நாம்
தீர்த்துக் கொண்டோம் அவர் கணக்கை இன்றோடு !
மூவேந்தர் முறை செய்தது நம் தமிழ்நாடு - தாய்
முலைப் பாலொடு வீரம் உண்டது செந்தமிழ் நாடு
கோவிலுக்குள் வேண்டாம் பிறர் தலையீடு - பகை
குறுகுறுத்தால் பொறுக்காதெம் படை வீடு !
நாவலரும் காவலரும் ஆண்டதிந்நாடு - நிமிர்ந்து
நாம்தமிழர் நாம்தமிழர் என்று பாடு!
நாவைப்பதா நம் சோற்றில் கோழிப்பேடு ? - தமிழா
நாம்தமிழர் நாம்தமிழர் என்று பாடு !
முத்துக் கடல் முரசறையும் முத்தமிழ் நாடு - நீ
முன்னேறுவாய் தமிழ் மறவா ஒற்றுமையோடு
நத்துவதை ஒப்பிடுமா நம்வீடு மறவா
நாம்தமிழர் நாம்தமிழர் என்று பாடு !
தத்தும் தவளைக் கிடமா முல்லைக்காடு - நம்
தமிழகத்தில் கால்வைப்பதா இந்திப்பேடு
நத்தை உறவாடுவதா சிங்கத்தோடு - தமிழா
நாம்தமிழர் நாம்தமிழர் என்று பாடு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக