சனி, 15 ஜூன், 2013

வீரத்தமிழ் மறவன் மணிவண்ணன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.


உலகின் மிகச்சிறந்த போராளி சேகுவேரா


“சே குவரா” என்ற பேயரை கேட்டவுடன் நம் நினைவுக்கு என்ன வரும்? அழுக்கு துணிகள் உடுத்தி, லேசான தாடியுடன்,கண்களில் புன்னகையுடன், துப்பாக்கி ஏந்திய ஒரு இளைஞன் நினைவுக்கு வருவன். சேகுவார என்ற இந்த பெயரும், அந்த உருவமும், புரட்சி என்பதற்கான குறியீடு. சே குவேரா 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் ஆர்ஜென்டீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார். ஸ்பானிய, பாஸ்க்கு, ஐரிய மரபுவழிகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவர். இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார்.