இது உண்மையில் ஒரு ஆச்சரியமான விடயம் தான்.அந்தக் காலத்தில் நடந்த விடயங்கள் கதைகளாக என்று அல்லாமல் பிரமிப்பூட்டும் வகையில் நடக்கும் சம்பவங்களைத் தான் நீங்கள் பார்க்கப் போகின்றீர்கள்.
மகாபாரதத்தில் வருகின்ற வீர கதா நாயகர்களில் ஒருவன் கடோற்கஜன். இவன் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான வீமனுக்கும் இடும்பி என்கிற அரக்கிக்கும் பிறந்தவன். இவன் மலை போன்று உயரமான பிரமாண்ட உடலை கொண்டவன் என்று சித்திரிக்கப்படுகின்றான். ஏன் இந்த பீடிகை என்று யோசிக்கின்றீர்களா?