ஐம்புலன் - ஊறு , சுவை ,ஒளி , ஓசை , நாற்றம்
அட்டாவதானி - ஒரே சமயத்தில் எட்டு விடையங்களை அவதானிக்கும் ஆற்றல் படைத்தவன்.ஐம்பூதம் - நிலம் , நீர் , தீ , காற்று , ஆகாயம்
ஐம்பொறி - மெய் , வாய் , கண் , மூக்கு , செவி
தசாவதானி - பத்து விடையங்களை ஒரே நேரத்தில் அவதானிக்கும் ஆற்றல் உள்ளவன்.
சதாவதானி - ஒரேநேரத்தில் நூறு விடையங்களை அவதானிக்கும் ஆற்றல் உடையவன்.
தசாப்தம் - பத்து ஆண்டுகளைக் கொண்ட காலப்பகுதி.
ஜெயந்தி விழா - வருடம்தோறும் ஒருவர் பிறந்த நாளன்று எடுக்கப்படும் விழா.
வெள்ளி விழா - இருபத்தைந்தாவது ஆண்டு இறுதியில் எடுக்கப்படும் விழா.
பொன் விழா - ஐம்பதாவது ஆண்டு முடிவிலே எடுக்கும் விழா.
மணி விழா - அறுபதாம் ஆண்டின் இறுதியில் எடுக்கப்படும் விழா.
பவள விழா - எழுபத்தைந்து ஆண்டுகள் முடிவடையும் போது எடுக்கப்படும் விழா.