திங்கள், 23 மே, 2011

பழந்தமிழரின் பன்னிரு மாதங்கள்....!

தமிழர் பன்னெடுங்காலமாக பயன்படுத்தி வந்த தமிழ் மாதங்களின் பெயர்களைத் தற்போது மறந்து விட்டு ஆரியர்கள் கொண்டு வந்த பன்னிரு மாதங்களையே இன்று நாம் பின்பற்றி வருகிறோம்.  அதாவது சித்திரை முதல் பங்குனி வரை உள்ள மாதங்களை ஆரியர்கள் தான் கொண்டு வந்தார்கள்.   இன்று  தமிழக அரசு தை மாதத்தை தமிழர்களின் முதல் மாதமாக ஆணையிட்டு அறிவித்துள்ளது.   இருப்பினும்  நாம் தை மாதத்தை சுறவம் என்ற மாதமாக தான் பின்பற்றி வந்தோம். ஆரியர்களின் புனர்தை என்பதில் தை என்ற ஈறு எழுத்தை மட்டும்  நமக்கு தந்துவிட்டனர். ஆரியர்களின் முதல் மாதம் சைத்திரா என்பதை தமிழரின் முதல் மாதம் சித்திரை என நம் மீது  திணித்துவிட்டனர்.