பிறமத ஆலயங்கள்

விடையத்தைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு
உங்கள் கணிப்பொறியின் சொடுக்கியால் பக்கத்தை அல்லது ஒளிப்படத்தை ஒருமுறை அழுத்தவும்.

   புத்தமடம்


நயினாதீவில் புத்தமத வழிபாடும் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்தமை மணிமேகலை புத்தபீடிகையைத் தரிசித்த வரலாற்றில் தெரிகிறது .
மணி ஆசனத்தையிட்டு சூலோதர மகோதர என்னும் நாக மன்னர்கள் சண்டை இட்டனர். அதை விலக்க புத்தபகவான் மணிநாகதீபத்துக்கு வந்தார். அவர்களால் அளிக்கப்பட்ட மணி ஆசனத்தில் இருந்து தர்ம உபதேசம் செய்தார். அதன் பின்னர் தான் நாகதீபமென அழைக்கப்பட்டது. இங்கிருந்த புத்த விகாரையும் டச்சுக்காரர் இத்தீவை தாக்கியபோது அழிக்கப்பட்டிருக்கலாம் என்று எண்ண இடமுண்டு. இங்கு கோவில் அழிந்துவிட்ட போதிலும் பௌவுத்தமதத்தினர் விசேட தினங்களில் இங்கு வந்து முன்கோவில் இருந்ததாக நம்பப்பட்ட சந்தனை என்னும் காணியில் தமது வணக்கத்தைச் செலுத்தி வந்தனர். இந்த இடத்தில் 1950 ல் புத்தமடம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

இஸ்லாமிய பள்ளிவாயில்


இந்தியாவில் கீழைக்கரை பெரிய பட்டினம் முதலிய இடங்களிலிருந்து 1915 ஆம் ஆண்டு தொடக்கம் முஸ்லிம்கள் இங்கே பிரதானமாக ஆனி மாசம் தொடக்கம் ஐப்பசிமாதம்வரை தங்கி இருந்தனர். இவர்கள் ஒரு சிறிய பள்ளிவாசலை அமைத்து வணங்கி வந்தனர். இப்போது இருக்கும் பள்ளிவாசல் 1919  கட்டப்பட்டது. பக்கத்தில் கடற்கரையில் அம்மா பள்ளிவாசல் ( சமாதி 1923 ) இருக்கிறது.  1924 ஆம் ஆண்டில் இவர்கள் 1500  பேர்வரை வந்திருந்தனர். ஏற்பட்ட கலகத்தின் பின் இவர்கள் வரவை அரசாங்கம் காவல் நிலையம் ஏற்படுத்திக் கட்டுப்படுத்தியது. இதன் பின்னர் இந்திய முஸ்லிம்கள் இங்கு வருவதை நிறுத்திக்கொண்டனர். இப்பொழுது அவர்களின் சந்ததியார் சிலர் இங்கு வெள்ளிக்கிழமை வேறு விசேட தினங்களில் தொழுது வருகிறார்கள்.
 
கிறிஸ்தவ தேவாலயம்



நயினாதீவில் மானிகரை என்னும் காணியில் கிறிஸ்தவ குருமார் தங்கி இருப்பதற்கு 1890 ஆம் ஆண்டளவில் ஒரு வீடமைக்கப்பட்டது. பின்னர் பள்ளிக்கூடமும் அமைக்கப்பட்டது. மதவழிபாட்டுக்குரிய மடமும் அமைக்கப்பட்டது. இவர்கள் அமெரிக்க திருச்சபையைச்சேர்ந்த புரட்டஸ்தாந்து மதத்தினர் ஆவர்.

 

நன்றி
புகைப்பட உதவி (திரு. ப .உமாசுதன் ஆசிரியர்)