இந்துக் கோவில்கள்

விடையத்தைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு
உங்கள் கணிப்பொறியின் சொடுக்கியால் பக்கத்தை அல்லது ஒளிப்படத்தை ஒருமுறை அழுத்தவும்.



ஐயனார் கோவில்




அம்மன் கோவிலின் அயலில் கிராமத்தின் வடக்கே காவல்தெய்வமாக வைக்கப்படும் (சாத்தனார்) ஐயனார் கோவில் முறையாக அமைந்துள்ளது. இக் கோவில் சிலப்பதிகார செட்டிமார் காலத்தது என்று எண்ணப்படுகிறது. வழிபடுவோருக்கு இன்னருள் பாலிக்கும் ஐயனார் கோவிலில் சித்திரா பூரணைத்தினத்தில் புராண படணம், கஞ்சி வார்த்தல் நீண்ட காலமாக நடைபெற்று வரும் வழிபாடாகும். அம்மன் கோவிலை டச்சுக்காரர் அழிப்பதற்கு முன் இக் கோவில் அம்மன் கோவில் பரிவாரமூர்த்திகளில் ஒன்றாய் இருந்ததென்றும் சிலர் கூறுவர். இக்கோவிலின் இப்பொழுதுள்ள கட்டிடம் 288 வருடப் பழமை உடையது.



வீரபத்திரர் கோவில்






நயினாதீவின் தம்பகைப்பதியில் அமையப்பட்டிருக்கும் ஆலயத்தில் எழுந்தருளி இருப்பவர் ஸ்ரீ வீரபத்திரப் பெருமான். ஆலஞ்சோலை மத்தியிலே இக் கோவில் ஏறக்குறைய 390 ஆண்டுகளுக்கு முன்னே சிறு கோவிலாக இருந்தது என்பர். கமக்காரர் தம் விளைவு முற்றிய காலத்திலே நெல் சிறுதானிய அரிசிகொண்டு பொங்கல் பூசைசெய்து வழிபாடாற்றி வந்தனர். இக் கோவில் முன்னர் இளைய பண்டாரம் கோவில் என்றும் வீரவாகு கோவில் என்றும் அழைக்கப்பட்டு வந்தது. அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்த புராண பயன்காரர்களில் சிறந்தவருள் ஒருவராக மதிக்கப்பட்டதிரு .தி .இராமச்சந்திரன் அவர்கள் தாம் பாடிய பதிகத்தில் உமையம்மையார் செடியருள் ஒருவரான 'மாணிக்க வல்லிபால் வந்திடும் சிவகுமரனே ... வீரவாகு தேவக் கடவுளே ' என்று பாடயுள்ளமை இதனைப் புலப்படுத்தும். மடாலயமாக இருந்து வந்த இக் கோவில் திருத்தப்பட்டு 1931 ஆம் ஆண்டில் கும்பாபிசேகம் செய்யப்பட்ட பின் ஸ்ரீ வீரபத்திரர் கோவில் என அழைக்கப்படுகிறது. பங்குனி உத்தரதினத்திலே கந்தபுராணபடனம் காப்புக்கட்டி வைகாசி விசாகத்திலே புராணபடனம் முடித்து வேல்பூசை என்னும் பெரும் பூசைவிழா எடுத்து செய்யப்படும். அன்னதானத்தில் அயல் கிராம மக்களும் பங்குபற்றுவர். இக் கோவிலின் அயலே அங்காமலையில் ஒரு சிவன் கோவில் இருந்ததென்றும் அதன் பரிவார மூர்த்தியாக வீரபத்திரரும் இதற்கு சமீபத்தில் இருக்கும் வயிரவரும் இருந்ததாகவும் சிலர் கூறுவர். அவ்வாறாயின் அங்காமலைச் சிவன் கோவிலும் டச்சுக்காரரால் அழிக்கப்பட்டிருக்கலாம் என எண்ண இடமுண்டு.




முருகமூர்த்தி கோவில்







முருகமூர்த்தி கோவில் நயினாதீவு இரட்டங்காலியில் அமைந்துள்ளது. 350 வருடங்களுக்கு மேற்பட்ட பழமையானது. முத்துச் சாமியார் இங்கு தங்கி வழிபட்டதாக கூறுவர். சமீப காலத்தில் இக்கோவில் புதிய வகையில் அமைக்கப்பட்டு பூசைகள் சிறப்பாக நடந்து வருகின்றன.




வேள்வி நாயன் கோவில்






கமக்காரரின் காவல் தெய்வம் வெளியில் நாயன் என்றும் அழைப்பதுண்டு. இந்திரன் கோவில். இந்திரனிடமுள்ள குலிசப் படையே கோவில் வழிபாட்டிடத்தில் அமைந்துள்ளது. கமக்காரர் பொங்கல் பூசை செய்து வழிபாடாற்றுவர். இப்பொழுது ஏறக்குறைய 90 வருடங்களுக்கு முன்னே புதுக்குவிக்கப்பட்டுள்ளது.


விநாயகர் கோவில்



செம்மணத்தம்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் என அழைக்கப்படுகின்றார். சில நூற்றாண்டுகளுக்கு முன் விநாயகரிடம் பேர் அன்பு பூண்ட ஒருபெண் வேதாரணியத்தில் இருந்து ஒரு விநாயகலிங்கத்தை இங்கு கொண்டது வந்தார். அச்சிலை நம்பிபுலம், நடுவகாடு, மூத்தனார் கோவில், பிள்ளையார் புலம் என்னும் இடங்களில் வைத்து வழிபாடாற்றப்பட்டு வந்தது. பின்னர் ஏறக்குறைய 290 வருடங்களுக்கு முன் செம்மணத்தம்புலத்தில் நிலையான ஒரு கோவில் அமைத்து வழிபாடாற்றப்பட்டு வருகிறது. கந்த புராண படனம் நடந்து பூசை நடைபெற்று வந்தது. முதல்சிலை ஊனமுற்ற படியால் ஆம் ஆண்டிலே சென்னையிலிருந்து தருவிக்கப்பட்ட சிலை தாபிக்கப்பட்டது. 1931 ஆண்டில் இருந்து அலங்காரத்திருவிழா நடைபெற்று வந்தது.1942 ஆம் ஆண்டு தொடக்கம் கொடியேற்றித் திருவிழா நடைபெற்று வருகிறது.


பிடாரி அம்மன் கோவில்




நயினாதீவு தென்மேற்கே தில்லைவெளியில் பிடாரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. அக்கோவில் முன்னர் அம்மன் கோவிலின் அயலில் தெற்குப்புறமாக கேணிக்குளியில் இருந்து வழிபாடாற்றப்பட்டு வந்தது. அச்சிலை பின்னர் தில்லைவெளியில் கோவிலில் தாபிக்கப்பட்டதென்பர். கடல்வழியாக எதிர்பாராது வந்த சிலையும் இக்கோவிலில் தாபிக்கப்பட்டு உள்ளது. இப்பொழுது எழுந்தருளி மூர்த்தியும் இருக்கிறது. வைகாசி மாதத்தில் பெரிய அளவில் பொங்கல் பூசை வேள்வி நடைபெற்று வருகிறது. அக்கோவில் 290 வருடப் பழமையுடையது.


காட்டுக்கந்தசாமியார்





நடுவகாடு என்னும் காணியில் ஏறக்குறைய 90 வருடங்களுக்கு முன் இக் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. காட்டில் இரு அன்பர்கள் இவ் வழிபாட்டை ஆரம்பித்தனர். ஒருவர் மறைந்துவிட்டார். மற்றையவர் தம்பூர்வசன்ம புண்ணிய வதத்தால் இந்த ஆலயத்தை கஷ்டப்பட்டு உழைத்து அமைத்தார்.தமக்கு பெருமான் கனவில் கூறியபடியே காட்டுக்கந்தசாமியார் என்று பெயரும் இட்டார்.


சமாதிக் கோவில்









காட்டுக்கந்தசுவாமியார் கோவிலின் மேற்கு வீதியில் அமைந்துள்ளது. சில காலத்துக்கு முன் அருள்ஒளி பரப்பும் ஆத்ம ஞானியாக விளங்கிய நயினாதீவுச் சுவாமி என அழைக்கப்பட்ட ஸ்ரீ முத்துக்குமார சுவாமி யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் 26-01-1949  பரிபூரணநிலை எய்தினார். இவர் இக் கோவிலில் சமாதி வைக்கப்பட்டுள்ளார். இங்கு பூசைகள் ஒழுங்காக நடைபெற்று வருகின்றன. அயலிலே அவர் அருள் அடியார்களால் ஒரு மடம் அமைக்கப்பட்டுள்ளது. அயலில் தீர்த்தக்கரையில் சிவாலயமும் திருக்குளமும் அமைக்கப்பட்டுள்ளன. கடற்கரையில் தொடுமணற்கேணியில் முன் தீர்த்தம் எடுக்கப்பட்டு வந்தது. ஆனிப்பூரணையில் அம்பாளும், சிவராத்திரி மாசிமகத்தில் விநாயகரும் இங்கே தீர்த்தம் ஆடிட வருவது வழக்கம்.


காளி அம்மன் கோவில்




பிரண்டைக்காடு என்னும் காணியில் எழுந்தருளி இருக்குறார். வழிபடும் அடியார்கள் வேண்டிய வரம் பெறுகின்றனர். இற்றைக்கு 240 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில். விஸ்வகுல மக்களின் பிரதான வழிபடு தெய்வமாக இருக்கிறது. நித்திய நைமித்தியங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. எழுந்தருளி அம்மனும் இக் கோவிலில் அருள் உலா புரிந்து இருக்கிறார்.


மீனாட்சி அம்மன்






பெருங்குளம் வயல்வெளி கமக்காரரின் காவல் ஆராதனைத் தெய்வம். பொங்கல் பூசை நடைபெறுகிறது. இற்றைக்கு 65 ஆண்டுகளுக்கு முன் புதிய கோவில் கடப்பட்டது.


மலையில் ஐயனார்




வைரவர் ஆலயம்




ஆனைமா முகத்து அண்ணல் 
ஆரனிடத் தமரும் தேவி 
வானெலாம் பரந்து எங்கும் 
வரமருள் ஞான மூர்த்தி 
தேனென இதயமெங்கும் திரிந்தருள்
புரியும் வேலன் 
தானவர் பணிந்து ஏத்தும் 
ஞானவைரவர் போற்றி  
(பாடல் - அருட்கவி)