வெள்ளி, 27 மே, 2011

அழிவின் விளிம்பில் இருக்கும் பவளப்பாறைகள் !

ஒரு நாட்டின் கடல் வளம் பவளப்பாறைகளை கொண்டு கணக்கிடப்படுகிறது. உலகம் முழுவதும் பவளப்பாறைகள் அழிவின் விளம்பில் உள்ளதை சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டி வருகின்றன. உலக மீன் நல வாரியம் மற்றும் உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் சுமார் 25 இயற்கை பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து கடல் வளம் மற்றும் பவளப் பாறைகள் குறித்த ஆய்வை நடத்தின.

திங்கள், 23 மே, 2011

பழந்தமிழரின் பன்னிரு மாதங்கள்....!

தமிழர் பன்னெடுங்காலமாக பயன்படுத்தி வந்த தமிழ் மாதங்களின் பெயர்களைத் தற்போது மறந்து விட்டு ஆரியர்கள் கொண்டு வந்த பன்னிரு மாதங்களையே இன்று நாம் பின்பற்றி வருகிறோம்.  அதாவது சித்திரை முதல் பங்குனி வரை உள்ள மாதங்களை ஆரியர்கள் தான் கொண்டு வந்தார்கள்.   இன்று  தமிழக அரசு தை மாதத்தை தமிழர்களின் முதல் மாதமாக ஆணையிட்டு அறிவித்துள்ளது.   இருப்பினும்  நாம் தை மாதத்தை சுறவம் என்ற மாதமாக தான் பின்பற்றி வந்தோம். ஆரியர்களின் புனர்தை என்பதில் தை என்ற ஈறு எழுத்தை மட்டும்  நமக்கு தந்துவிட்டனர். ஆரியர்களின் முதல் மாதம் சைத்திரா என்பதை தமிழரின் முதல் மாதம் சித்திரை என நம் மீது  திணித்துவிட்டனர். 

சனி, 21 மே, 2011

குறுஞ்சிப்பாட்டுக் கூறும் 99 வகை மலர்கள்

பைந்தமிழ் பயின்று வரும் குறிஞ்சிப் பாட்டினை இயற்றியவர் கபிலர் என்பது நாமறிந்த ஒன்று. அக் குறிஞ்சிப் பாட்டில் கபிலர் 99 வகையான மலர்களைப் பற்றிக் கூறியுள்ளார் என்பது நாமறியாத ஒன்று.  மல்லி, முல்லை, கனகாம்பரம் என ஒரு சில மலர்களைத் தவிர மற்றவற்றை நாம் பார்த்ததுக் கூட கிடையாது . ஆனால் கபிலர் கவிஞராக மட்டுமின்றி சிறந்த இயற்கை ஆய்வாளராகவும் இருந்துள்ளார். கபிலர் கூறிய 99 வகையான மலர்கள் அகர வரிசைப்படி ! படித்து மகிழுங்கள்.  நூற்றுக்கு ஒன்று குறைவு அவ்வளவுதான்.                   

வியாழன், 19 மே, 2011

தமிழக முதல்வர்கள்

நாம்  சுதந்திரம் பெறுவதற்கு முன்பிலிருந்து இன்று வரை அதாவது தமிழகத்தின் முதல் முதலைமைச்சர் முதல் இன்றுவரை உள்ள  மாண்புமிகு  முதலமைச்சர்களின் பட்டியல் !