கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மை இடம் உண்டு. வட்டதிற்கான பரப்பளவை முதலில் கண்டவர்கள் நாம் என்ற வகையில் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.வட்டத்திற்கான பரப்பளவை காக்கைப்பாடினியம் என்ற தொன்மையான நூல் விளக்குகின்றது. தொல்காப்பியருக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த காக்கைப்பாடினியார். (தொல்காப்பியர் காலம் எனபது கி.மு.711 ஆகும்.) இவர் எழுதிய அற்புதமான கணித நூல் “ காக்கைப்பாடினியம்” ஆகும். இதில் வட்டதிற்கான பரப்பளவை செய்யுள் வடிவில் கூறியுள்ளார்.
வட்டத்தரை கொண்டு விட்டத்தரை
தாக்க சட்டெனத் தோன்றும் குழி
என்ற பாடல் மூலம் வட்ட வடிவ நிலத்தின் பரப்பளவை காணும் முறைகளை விளக்குகிறார். இந்த பாடல் பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படும் கணக்கதிகாரத்தில் 46 மற்றும் 49 ஆம் பாடல்களாக வந்துள்ளன.
.
பாடல் 46 :
வட்டத்தரை கொண்டு விட்டத்தரை
தாக்க சட்டெனத் தோன்றும் குழி
விளக்கம்:
வட்டத்தரை = வட்டத்தின் சுற்றளவு / 2 = 2πr/2 = πr
விட்டத்தரை = விட்டம் / 2 = 2r/2 = r
குழி ( பரப்பு ) = வட்டத்தரை X விட்டத்தரை ( தாக்க=பெருக்க)
∴ வட்டத்தின் பரப்பு = πr x r = πr2
பாடல்: 49
விட்டத்தரை கொண்டு வட்டத்தரை
தாக்க சட்டெனத் தோன்றும் குழி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக