கோள் என்பது, ஒன்றிலிருந்து ஒன்றை வாங்கி அடுத்தவருக்குத் தருவது என்ற பொருளில்தான் கோள் சொல்லுதல், கோள் மூட்டுதல் என்ற சொற்கள் வழக்கில் உள்ளது. ஒருவர் செய்தியை மற்றவருக்குத் தெரிவிப்பதே கோள் சொல்லுதல் எனப்படும். ஒன்றிலிருந்து ஒன்றைக் கொண்டு (ஒளியை) அதன் மூலம் வினையாற்றும் பொருளே கோள் எனப்பட்டது. கோள்கள் அனைத்தும் கதிரவனின் ஒளியைப் பெற்று உலகிற்கு எதிரொலிக்கின்றன.
விண்மீன்களை நாள்மீன் என்றும், கோள்மீன் என்றும் தமிழர் இரு வகையாகப் பிரித்தனர். நாள்மீன் என்பது தன்னொளி கொண்டதாகும். கோள்மீன் என்பது தன்னொளியற்று பிற மீன் ஒளியை எதிரொலிப்பது ஆகும். மீன் என்ற சொல்லை நோக்குக. மீன் (தமிழ்), மீனசு (கிரேக்கம்), மனசு (லிடியம்), மீனோசு (எகிப்தியம்), மனு (எபிரோயம்). இங்கு மீன் எனப்படுவது நீரில் வாழ்வது அல்ல, விண்ணில் உலவும் விண்மீனையே. கடைக்கழக இலக்கியங்கள் விண்மீன்களை, மீன் என்ற சொல்லால் சுட்டுகின்றன.
வான்கண் விழியா வைகறை யாமத்து
மீன்திகழ் விசும்பின் வெண்மதி நீங்க
- சிலப்பதிகாரம்73
இதிலிருந்து விண்மீன் என்ற மீன் பற்றிய தமிழ்ச்சொல்லே, பன்னாட்டு மொழிகளிலும் பரவியிருப்பது, மீன்களை பற்றி சொன்னவர்கள் தமிழர்களே என்பதை உறுதிப்படுத்தும். வானியலின் தோற்ற நாடு தமிழகமே என்பதைப் பொறுத்தமட்டில் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
மேலும் 27 விண்மீன்களுக்கான தமிழ்ப்பெயர்கள் தெளிவாக உள்ளன. புரவி (அசுவினி) முதல் தோணி (ரேவதி) வரையில், அவ்விண்மீன்களின் தன்மைக்கேற்பத் தமிழர்கள் சூட்டிய பெயர்கள், சிற்சில மாற்றங்களுடன் வடமொழியில் சொல்லப்பட்டுள்ளன. ஆனால் கிரேக்க மொழியில் 27 விண்மீன்களில் 13 விண்மீன்களுக்குப் பெயர்களே இல்லை. அவர்கள் மீன்களின் ஒளியை வரிசைப்படுத்தி அதற்கு ஆல்பா, பீட்டா பெயரிட்டு விண்மீன் கூட்டத்திலுள்ள முதலாவது இரண்டாவது விண்மீன் என்றழைத்தனர். ( நோக்குக : அயோட்டா, கோர்வி, பீட்டா லிப்ரா ) தமிழர்கள் பெயரிட்டு அழைத்த 27 விண்மீன்கள் இதோ....
வ. எண் | தமிழ் | சமற்கிருதம் | கிரேக்கம் |
1 | புரவி | அசுவினி | Hamal |
2 | அடுப்புக்கொண்டை | பரணி | Sheratan |
3 | ஆரல் | கார்த்திகை | Pliades |
4 | சகடு | உரோகிணி | Aldebaran |
5 | மான்தலை | மிருக சீரிடம் | Bellatrix |
6 | மூதிரை | திருவாதிரை | Betelgeuse |
7 | கழை | புனர் பூசம் | Pollux |
8 | காற்குளம் | பூசம் | Tegmine |
9 | கட்செவி | ஆயில்யம் | Acubens |
10 | கொடுநுகம் | மகம் | Regulas |
11 | கணை | பூரம் | Zozma |
12 | உத்திரம் | உத்திரம் | Denebola |
13 | ஐவிரல் | அத்தம் | D.Corvi |
14 | அறுவை | சித்திரை | Spica |
15 | விளக்கு | சுவாதி | Boots Arcturus |
16 | முறம் | விசாகம் | Libra |
17 | முடப்பனை | அனுசம் | Graffias |
18 | துளங்கொளி | கேட்டை | Antares |
19 | குருகு | மூலம் | Acumen |
20 | உடைகுளம் | பூராடம் | Rukbat |
21 | கடைகுளம் | உத்திராடம் | Facies |
22 | முக்கோல் | திருவோணம் | Aquila |
23 | காக்கை | அவிட்டம் | Delphinus |
24 | செக்கு | சதயம் | Sadal Malek |
25 | நாழி | புரட்டாதி | Markab |
26 | முரசு | உத்திரட்டாதி | Algenib |
27 | தோணி | ரேவதி | Alrescha |
நன்றி முத்தரசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக