வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

திருக்குறள்

  1. திருக்குறளுக்கு முப்பால் , தமிழ்மறை , தமிழ் வேதம் ,பொய்யாமொழி என பல சிறப்புப் பெயர்கள் உண்டு.
  2. திருக்குறள் பதிணென் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
  3. திருக்குறள் ஏழு சீர்களைக் கொண்டது.
  4. திருக்குறள்  ஈரடி வெண்பா வகையைச் சார்ந்தது.
  5. 53 புலவர்களால் பாடப்பெற்ற திருவள்ளுவமாலை என்ற நூல் திருக்குறளின் சிறப்பையும் பெருமையையும் எடுத்துரைக்கின்றது.
  6. 1330 குறள்களில் 14000 சொற்களும் 41294 எழுத்துக்களும் உள்ளன. ஆனால் ஒரு இடத்தில் கூட தமிழ் என்ற வார்த்தையை வள்ளுவர் பயன்படுத்தவில்லை.
  7. தமிழ் மொழியில் அகரவரிசை எழுத்துக்கள் போலவே திருக்குறளும் முதல்குறள் " அ " வில் தொடங்கி இறுதிக் குறளின் இறுதி எழுத்து " ன் " னில் முடிவடைகிறது.  
  8. இலக்கிய நூல்களில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் என்ற பெருமை திருக்குறளுக்கே உண்டு. 
  9. அதிகமான உரையாசிரியர்களை பெற்ற நூல் என்ற பெருமையும் சிறப்பும் திருக்குறளுக்கு உரியது. 
  10. 1330 திருக்குறள்களில் ஒன்று , பத்து , நூறு , ஆயிரம் , 1 கோடி எனப் பல எண்களை கையாண்ட வள்ளுவர் ஒருகுறளில் கூட "ஒன்பது" என்ற எண்ணைக் கையாளவில்லை.
  11. திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் இருமுறை வருகிறது. அது குறிப்பறிதல் அதிகாரம். 
  12. 1330 குறள்களில் (6) குறள்களில் தெய்வம் என்ற சொல்லை கையாண்ட வள்ளுவர் , கடவுள் என்ற சொல்லை குறள்களில் கையாளவில்லை.
  13. பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை கற்பிக்கப்படும் இலக்கிய நூல் என்ற பெருமை திருக்குறளுக்கே உண்டு.
  14. தமிழ் எழுத்துக்களில் வள்ளுவர் " ஒள " என்ற எழுத்தை குறளில் ஒரு இடத்திலும் கையாளவில்லை.
  15. திருக்குறளில் 1330 குறள்களிலும் " கற்பு " என்ற சொல் நேரடியாக 54 வது குறளில் மட்டும் இடம்பெறுகிறது.
  16. 1330 குறள்களிலும் ஒரே ஒரு குறளை மட்டும் இறுதியில் ஒரே ஒரு எழுத்துடன் முடித்துள்ளதைக் காணலாம்.

    குறள் 1159
    தொடிற் சுடின் அல்லது காமநோய் போல்
    விடின் சுடல் ஆற்றுமோ தீ
  17. 1330 குறள்களிலும் ஒரே ஒரு குறளை மட்டும் எந்த எழுத்தில் ஆரம்பித்தாரோ அதே எழுத்தில் முடித்து விடுகிறார்.
    குறள் 391
    கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக  
  18. 1330 குறள்களிலும் இரு குறள்களில் மட்டும் குறளின் இரண்டாவது அடியில் மிகவும் குறைந்த ஏழு எழுத்துக்கள் வருவதைக்காணலாம்.
    குறள்34
    மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்
    ஆகுல நீர பிற
    குறள் 1118
    மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல்
    காதலை வாழி மதி 
  19. கொம்பு எழுத்துக்கள் ( ஒற்றைக்கொம்பு , இரட்டைக்கொம்பு ) இல்லாமல் 17  குறள்கள் அமைந்துள்ளன.
    உ - ம்
    குறள் 100
    இனிய உளவாக இன்னாத கூறல்
    கனியிருப்பக் காய் கவர்ந்தற்று 
  20. கால் எழுத்துக்கள் , அரவு , துணை எழுத்துக்கள் இல்லாமல் சில குறள்கள் இடம்பெற்றுள்ளன.
    குறள் 341
    கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க அதற்க்குத் தக  
  21. 1330 குறள்களிலும் குறைந்த எழுத்துக்களில் வரும் குறள் ;
    குறள் 1242
    காதல் அவரில ராகநீ நோவது
    பேதைமை வாழி என் நெஞ்சு 
  22. 1330 குறள்களிலும் கூடுதலான எழுத்துக்களை கையாளும் குறள் ;
    குறள் 1246
    கலந்துணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்துணராய்
    பொய்க்காய்வு காய்தி என் நெஞ்சு 
  23. திருவள்ளுவர் சொல்லும் கருத்துக்கள் எக்காலத்திலும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கின்றன.
  24. 1330 குறள்களையும் கற்கும்போது சில எழுத்துக்களில் இருந்து குறள் ஆரம்பிக்கப் படாததை அவதானிக்கலாம். அவ் எழுத்துக்களாவன ; கி , கீ , சே , சோ , சை , நே , நொ , பூ , மீ , மூ என்பனவாகும்.
  25. பின்வரும் எழுத்துக்களில் ஒரே ஒரு குறள் மட்டும் ஆரம்பமாகியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. அவையாவன மோ , தோ , பீ , ஞா , போ , நூ , மை என்பனவாகும். அக்குறள்கள் பின்வருமாறு.
    குறள்
    93    மோப்பக் குழையும் அனிச்சம்
    236  தோன்றில் புகழொடு தோன்றுக 
    475  பீலி பொய் சாகாடும்
    484  ஞாலம் கருதினும் கை கூடும்
    693  போற்றின் அரியவை போற்றல்
    683  நூலாருள் நூல் வல்லன் ஆகுதல்
    838  மையல் ஒருவன் 
  26. மாதானுபங்கி, முதற்பாவலர், நான்முகனார், செந்நாப்புலவர் நாயனார், தெய்வப்புலவர் என்ற பல சிறப்புப் பெயர்களை பெற்றவர் திருவள்ளுவர்.
  27. திருக்குறளில் 1705 முறை பயன்படுத்தப்பட்ட ஒரே எழுத்து " ன் " என்ற எழுத்தாகும்.
  28. முதலடியில் நான்கு சீரும் இரண்டாம் அடியில் மூன்று சீரும் கொண்ட குறுகிய பாடலில் பெருகிய பொருளைக் கொடுப்பது திருக்குறள்.
     
    ...................





     

1 கருத்து:

  1. தங்களின் இந்தப் பக்கத்தைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. திருக்குறள் குறித்து *எழுத்து* அளவில் அரிய தகவல்களைத் தந்துள்ளீர்கள். இந்தத் தகவல்கள் புத்தக வடிவில் வெளிவந்துள்ளனவா? மேலும் விவரம் அறிய ஆவலாய் உள்ளேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு