சனி, 21 மே, 2011

குறுஞ்சிப்பாட்டுக் கூறும் 99 வகை மலர்கள்

பைந்தமிழ் பயின்று வரும் குறிஞ்சிப் பாட்டினை இயற்றியவர் கபிலர் என்பது நாமறிந்த ஒன்று. அக் குறிஞ்சிப் பாட்டில் கபிலர் 99 வகையான மலர்களைப் பற்றிக் கூறியுள்ளார் என்பது நாமறியாத ஒன்று.  மல்லி, முல்லை, கனகாம்பரம் என ஒரு சில மலர்களைத் தவிர மற்றவற்றை நாம் பார்த்ததுக் கூட கிடையாது . ஆனால் கபிலர் கவிஞராக மட்டுமின்றி சிறந்த இயற்கை ஆய்வாளராகவும் இருந்துள்ளார். கபிலர் கூறிய 99 வகையான மலர்கள் அகர வரிசைப்படி ! படித்து மகிழுங்கள்.  நூற்றுக்கு ஒன்று குறைவு அவ்வளவுதான்.                   

வியாழன், 19 மே, 2011

தமிழக முதல்வர்கள்

நாம்  சுதந்திரம் பெறுவதற்கு முன்பிலிருந்து இன்று வரை அதாவது தமிழகத்தின் முதல் முதலைமைச்சர் முதல் இன்றுவரை உள்ள  மாண்புமிகு  முதலமைச்சர்களின் பட்டியல் !

புதன், 27 ஏப்ரல், 2011

சிறுநீரகம் யாருக்கு அதிகம் பாதிப்படையும் ?

இயற்கையின் படைப்புகள் அனைத்தும் வியக்கத் தக்கவை.  உயிரினங்களில் ஒரு செல் உயிரி முதல் மனிதன் வரை உள்ள அனைத்து படைப்புகளிலும் பல அற்புதங்கள் புதைந்துள்ளன. இதில் மனித உடலானது ஒரு மாபெரும் படைப்பாகும்.

மனித உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் இன்றியமையாதவை.  இவற்றில் சில உறுப்புகளின் செயல்பாடுகள் விரைவில் குன்றிவிடும் என்பதற்காக இரண்டு உறுப்புகளை இயற்கை வடிவமைத்துள்ளது. எடுத்துக்காட்டாக கண், காது, மூக்கு துவாரம், நுரையீரல், சிறுநீரகம் இவைகள் இரண்டு உறுப்புகளாக உள்ளன.  இப்படி மனித உடலின் இயக்கத்திற்கு உதவும் சிறுநீரகம் பற்றி இந்த இதழில் தெரிந்துகொள்வோம்.