சனி, 21 மே, 2011

குறுஞ்சிப்பாட்டுக் கூறும் 99 வகை மலர்கள்

பைந்தமிழ் பயின்று வரும் குறிஞ்சிப் பாட்டினை இயற்றியவர் கபிலர் என்பது நாமறிந்த ஒன்று. அக் குறிஞ்சிப் பாட்டில் கபிலர் 99 வகையான மலர்களைப் பற்றிக் கூறியுள்ளார் என்பது நாமறியாத ஒன்று.  மல்லி, முல்லை, கனகாம்பரம் என ஒரு சில மலர்களைத் தவிர மற்றவற்றை நாம் பார்த்ததுக் கூட கிடையாது . ஆனால் கபிலர் கவிஞராக மட்டுமின்றி சிறந்த இயற்கை ஆய்வாளராகவும் இருந்துள்ளார். கபிலர் கூறிய 99 வகையான மலர்கள் அகர வரிசைப்படி ! படித்து மகிழுங்கள்.  நூற்றுக்கு ஒன்று குறைவு அவ்வளவுதான்.                   


    
  1. அகில்
  2. அசோகம்
  3. அடும்பு
  4. அவரை
  5. அனிச்ச மலர்
  6. ஆத்தி
  7. ஆம்பல்
  8. ஆரம்
  9. ஆவிரம்
  10. இண்டம்
  11. இருவாட்சி
  12. இலவம்
  13. எறுழம்
  14. ஓமை
  15. கஞ்சம்
  16. கருங்குளை
  17. கருநொச்சி
  18. கருவிளம்
  19. கருத்தழம்பூ
  20. காஞ்சிப்பூ
  21. காட்சி மல்லிகை
  22. செங்காந்தள்
  23. காயா
  24. குரவம்
  25. குருக்கத்தி
  26. கருந்து
  27. குவளை
  28. குறிஞ்சி மலர்
  29. குன்றிப்பூ
  30. கூவிளம்
  31. கொகுடி
  32. கொடுவேரி
  33. கொருக்கச்சி
  34. கொன்றை
  35. கோங்கம்
  36. கோடல்
  37. சாதி மல்லி
  38. சிறுபூனை
  39. சிறுமூங்கில்பூ
  40. சுரபுன்னை
  41. சூரல் 
  42. செங்கருங்காலி
  43. செங்கழுநீர்
  44. செண்பகப்பூ 
  45. செம்பூ
  46. செம்மணி 
  47. செருந்தி
  48. ஞாழல்பூ 
  49. தணக்கம்
  50. தாமரை
  51. தாழம்பூ 
  52. திருத்துழய்ப்பூ 
  53. தில்லை
  54. தும்பைப்பூ 
  55. தெங்குப்பாளை
  56. தேமா 
  57. தோன்றி
  58. நந்தியாவட்டை 
  59. நரந்தம்
  60. நறை
  61. நாகலிங்கப்பூ 
  62. நெய்தல் 
  63. பகன்றை 
  64. பச்சிலை
  65. பயினி
  66. பருத்தி 
  67. பலாசு
  68. பவழ மல்லி 
  69. பாதிரி
  70. பாலை 
  71. பிச்சி
  72. பிடவம்
  73. பீர்க்கு 
  74. புனலி
  75. பெரும்புன்னை 
  76. பெருமூங்கில் 
  77. போங்கம்
  78. மகிழம்பூ 
  79. மஞ்சாடி
  80. மரவம் 
  81. மரா 
  82. மருதம் 
  83. மலை எருக்கு
  84. மாம்பூ
  85. முருக்கம்
  86. முல்லை
  87. மௌவல் 
  88. வஞ்சி 
  89. வடவனம் 
  90. வள்ளி 
  91. வாகை
  92. வாழைப்பூ
  93. வானி
  94. வில்வம் 
  95. வெட்சி
  96. வெப்பாலை 
  97. வெண்காக்கணம் 
  98. வேன்கோடல் 
  99. வேங்கை 
நன்றி முத்தரசு ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக