சிறு வயதிலேயே அப்ளிக்கேஷன்களை உருவாக்கிய ஷர்வன் மற்றும் சஞ்ஜெய் சகோதரர்கள் சொந்தமாக டேப்லெட் தயாரிப்பதே தங்களது லட்சியம் என்று தெரிவித்துள்ளனர். 12 வயது நிரம்பிய ஷர்வன் மற்றும் 10 வயது நிரம்பிய சன்ஜய் ஆகிய இந்த இருவரும் சொந்த முயற்சியில் புதிய அப்ளிகேகேஷன்களை உருவாக்கியுள்ளனர். இவர்கள் உருவாக்கிய அப்ளிக்கேஷன்கள் கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேரால் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறிய வயதிலேயே அப்ளிக்கேஷன் டெவலப்பர்கள் என்ற பெருமையையும் தட்டி சென்றிருக்கிறார்கள்.
இன்று உலக பொருளாதார நிபுனர்களையே ஆச்சர்யத்துடன் திரும்பிப்பார்க்க வைத்துள்ளனர் இந்தியாவில் டெல்லியை சேர்ந்த வீடற்ற வீதி சிறுவர்கள். பாடசாலைக்கு கூட செல்ல முடியாது வறுமை காரணமாக சிறுவயதிலேயே தொழிலுக்கு செல்ல நிர்ப்பந்திக்கப்பட்ட இச் சிறுவர்கள், தமக்குள்ளே ”கயானா” என்ற அமைப்பை ஸ்தாபித்து அதனை வங்கியாக விஸ்தரித்துள்ளனர். இவ் வங்கியில் முகாமையளரில் இருந்து, அலுவலகர், வாடிக்கையாளர் என தெரு சிறுவர்களே காணப்படுகிறார்கள்.தாம் அன்றாடம் உழைக்கும் பணத்தை முறைப்படி இவ் வங்கியில் சேர்த்து, அவ் வங்கி மூலம் பல சேவைகளை வழங்குகிறார்கள். இவ் வங்கியை தெற்காசியா முழுவதும் விஸ்தரிப்பதே தமது நோக்கம் என்று இவ் வங்கி முகாமையாளராக பணிபுரியும் சிறுவன் சதீஷ் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பான முழுமையான ஆவணப்படத்தை கீழே வீடியோவில் பார்க்கலாம்.