சிறு வயதிலேயே அப்ளிக்கேஷன்களை உருவாக்கிய ஷர்வன் மற்றும் சஞ்ஜெய் சகோதரர்கள் சொந்தமாக டேப்லெட் தயாரிப்பதே தங்களது லட்சியம் என்று தெரிவித்துள்ளனர். 12 வயது நிரம்பிய ஷர்வன் மற்றும் 10 வயது நிரம்பிய சன்ஜய் ஆகிய இந்த இருவரும் சொந்த முயற்சியில் புதிய அப்ளிகேகேஷன்களை உருவாக்கியுள்ளனர்.
இவர்கள் உருவாக்கிய அப்ளிக்கேஷன்கள் கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேரால் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறிய வயதிலேயே அப்ளிக்கேஷன் டெவலப்பர்கள் என்ற பெருமையையும் தட்டி சென்றிருக்கிறார்கள்.
இவர்கள் ‘கோ டைமென்ஷன்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். தொழில்நுட்பம் சம்மந்தமான விஷயங்களில் இன்றைய குழந்தைகள் எவ்வளவு ஆர்வமாக இருக்கின்றனர் என்பதற்கு, ஷர்வன் மற்றும் சன்ஜய் சகோதரர்கள் பெரிய உதாரணம் என்று கூறலாம்.
சைமென்டெக் நிறுவனத்தின் உயர் அதிகாரியாக பணி புரியும் இவரது தந்தை, தொழில் நுட்பம சம்மந்தமான விஷயங்களை தெரிந்து கொள்ள பெரிதும் உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் சகாப்தமான ஸ்டீவ் சாப்ஸ் மற்றும் பில் கேட்ஸ் இவர்களுக்கு சிறந்த முன்மாதிரி என்று இந்த குட்டி தொழில் நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்த சாதனை சகோதரர்கள் கோ டைமென்ஷன் என்ற தங்களது நிறுவனத்தினை நடத்தி வருவது மட்டும் அல்லாது, ஷர்வன் மற்றும் இவர்களது எதிர்கால கனவையும் கூறியிருக்கின்றனர்.
‘கோ ஷீட்’ என்ற தங்களது டேப்லட்டை சொந்தமாக தயாரித்து வெற்றிகரமாக வெளியிட வேண்டும் என்பதே தங்களது லட்சியம் என்று தெரிவித்திருக்கின்றனர்.
கோ டெமென்ஷன் என்றாலே எல்லை கடந்து எல்லா திசைகளிலும் செல்வது என்ற புதிய இலக்கணம் சொல்லும் ஷர்வன் மற்றும் சன்ஜய் சகோதரர்களின் வெற்றியும் எல்லை கடந்து செல்ல வாழ்த்துக்கள்.
நன்றி தமிழ்க்கதிர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக