செவ்வாய், 29 ஜனவரி, 2013

மாதாவின் திருவுருவச் சிலைக்கு தீ வைப்பு.

மாதாவின் திருவுருவச் சிலைக்கு தீ வைப்பு. அவிசாவளை, புனிதமரியாள் வித்தியாலயம் அமைந்துள்ள பிரதான வீதியோரத்தில் ஒருவித விலையுயர்ந்த நாரினால் தயாரிக்கப்பட்ட மாதாவின் திருவுருவச் சிலைக்கே நாசகார  சக்தியினால் இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது.இச் சிலை 13 அடி உயரம் கொண்டது.
கொழும்பு மறைமாவட்டதுக்குட்பட்ட அவிசாவளை நகரின் பங்குத்தேவாலயமான புனித மரியாள் தேவாலயம் ஸ்தாபிக்கப்பட்டு இவ்வருடத்துடன் 150 ஆண்டுகள் பூர்த்தியாகிறது. இம்  முப்பொன் விழாவைச் சிறப்பிக்குமுகமாக இப்பங்கிற்குட்பட்ட கத்தோலிக்க மக்களும் குருமாரும் நற்கருணை மாதா சிலை ஒன்றை ஸ்தாபிக்க தீர்மானித்து கொழும்பு மறைமாவட்ட ஆயர் கர்தினால் ரஞ்சித் மல்கம் அனுசரணையுடன் உரிய ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார். இவ்வாறு உருவாக்கப்பட்ட சிலையே எரியூட்டப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி (29-01-2013)

இன்றையதினம் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள சிறிய மாதாசிலையைப் படத்தில் காணலாம். எரியூட்டப்பட்ட மாதா சிலையின் எஞ்சிய பகுதியில் (தலைப்பகுதியில்) தற்காலிகமான சிலை காணப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக