சனி, 19 மே, 2012

மகாபாரத நாயகன் கடோற்கஜனின் எலும்புக்கூடு ...!



இது உண்மையில் ஒரு ஆச்சரியமான விடயம் தான்.அந்தக் காலத்தில் நடந்த விடயங்கள் கதைகளாக என்று அல்லாமல் பிரமிப்பூட்டும் வகையில் நடக்கும் சம்பவங்களைத் தான் நீங்கள் பார்க்கப் போகின்றீர்கள்.
மகாபாரதத்தில் வருகின்ற வீர கதா நாயகர்களில் ஒருவன் கடோற்கஜன். இவன் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான வீமனுக்கும் இடும்பி என்கிற அரக்கிக்கும் பிறந்தவன். இவன் மலை போன்று உயரமான பிரமாண்ட உடலை கொண்டவன் என்று சித்திரிக்கப்படுகின்றான். ஏன் இந்த பீடிகை என்று யோசிக்கின்றீர்களா?
கடோற்கஜன் போன்ற அரக்கர்கள் உண்மையில் வாழ்ந்தார்களா? என்று நீங்கள் கேள்வி எழுப்பக் கூடும். ஆனால் நம்ப முடியாத உண்மை ஒன்று நிகழ்ந்து உள்ளது.
சில வருடங்களுக்கு முன்னர் வட இந்தியாவில் உள்ள சிறிய பாலைவனம் ஒன்றில் தேசிய புவியியல் ஆய்வு நிபுணர்கள் இராணுவத்தின் உதவியுடன் ஒரு பிரதேசத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இப்பிரதேசம் இராணுவ நியாயாதிக்கத்தின் கீழ் உள்ளதாலேயே இராணுவத்தின் உதவி பெறப்பட்டது.
இவர்கள் நிலத்துக்கு கீழ் இருந்து மிக மிகப் பெரிய எலும்புக் கூடுகளை மீட்டனர். இவை கடோத்கஜன் போன்ற அரக்கர்களின் பிரமாண்ட உடலின் எலும்புக் கூடுகள்தான் என்று இந்நிபுணர்கள் விசுவாசிக்கின்றனர். இந்த இடத்துக்கு தேசிய புவியியல் ஆய்வு நிபுணர்கள் தவிர வேறு யாரும் செல்ல முடியாது என இந்திய அரசு பிரகடனப்படுத்தி உள்ளது.
இது குறித்த தகவல்களை அந்நாட்களில் Hindu Voice பத்திரிகை பிரசுரித்து இருந்தது.
இராட்சதர்களுடையது என்று நம்பப்படுகின்ற எலும்புக் கூடுகளின் புகைப்படங்கள், பத்திரிகையில் வெளியான செய்தி அப்படியே உங்களுக்காக…





நன்றி kதமிழ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக