வியாழன், 8 நவம்பர், 2012

நாசா நடத்திய போட்டியில் முதல் பரிசைத் தட்டிச்சென்ற நம் தமிழக மாணவிகள்.




நாசா நடத்திய போட்டியில் புற ஊதாக்கதிர்கள் பற்றி கட்டுரை சமர்ப்பித்து நெதர்லாந்து சென்று முதல் பரிசை தட்டிக்கொண்டு வந்துள்ளனர் நம் தமிழக மாணவிகளான துர்காவும்,திவ்யாவும். இந்த மாணவிகளை கட்டுரைக்காக சந்தித்தபோது "பல ஐரோப்பிய நாடுகள் வெளிச்சம் இல்லாமல் பனியிலேயே மூழ்கிக் கிடக்கின்றன.மற்ற நாடுகளில் இல்லாத சூரியஒளி என்ற அற்புதம் நம்ம நாட்டுல அதிகமாவே இருக்கு.மின்சாரப் பற்றாக்குறை என்று குறைகூறும் நம் ஆட்சியாளர்கள்  சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரித்தால் என்ன என்று முற்போக்குத்தனமான தங்கள் கருத்தை கூறினர் இந்த மாணவிகள். நம்ம தமிழகத்துல இந்தியாவுக்கே மின்சாரம் தர நெய்வேலி, கல்பாக்கம் இருக்கு. ஆனா 12 மணிநேர பவர்கட். பல மாநிலங்களில் அணுவுலையும் இல்லை, நிலக்கரி சுரங்கமும் இல்லை. ஆனா அங்கெல்லாம் மின்சாரத் தடையே கிடையாது. அவர்களால் மட்டும் எப்படி சாத்தியப்படுத்த முடிகிறது? கூடங்குளம் அமைத்தால் மின்சாரத் தடையே இருக்காது என்பதெல்லாம் ஊரை ஏமாத்துற வேலை .. இதுக்கு அப்துல் கலாமும் உடந்தை..." என்றனர்.

நீங்கள் சோலார் மின்சாரம் பற்றிய எதிர் பிரச்சாரங்களையும், அணுவுலையை ஆதரிப்பவர்களின் பின்னால் இருக்கிற கமிஷன் காசு அடிக்கிற பொய் பிரச்சாரங்களையும் நம்புபவராக இருந்தால் .... சோலார் பேனல்கள் மற்றும் சோலார் மின்சாரம் தயாரிப்பாளர்களின் கம்பெனிகளின் ஆண்டு இறுதி அறிக்கையை பார்ப்பீர்களானால் உண்மையில் வியந்துப் போவீர்கள். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டின் மத்தியிலேயே அவை பெரும் வளர்ச்சியையும், லாபத்தையும் அடைந்துள்ளன. 2012 ஆம் ஆண்டில் அமெரிக்காவை சோலார் பேனல் மின்சார சக்தி திட்டங்கள் தான் ஆக்ரமித்து இருக்கும் அந்த துறையின்  வளர்ச்சி தான் சீராக , நன்றாக வளர்ந்து வருகிறது என குறிப்பாக அமெரிக்காவில் அதிகமான சூரிய எரிசக்தி தொழில் கூட்டமைப்பு மற்றும் GTM ஆராய்ச்சி அறிக்கை கூறுகிறது, இதுவரை 742 மெகாவாட் பெறுகிற அளவுக்கு சோலார் பேனல்கள் நிறுவப்பட்டு 2012 இரண்டாம் காலாண்டில்..  இருமடங்கு சூரிய தகடுகளின் தேவை அதிகரித்து இருக்கிறது.

இந்த ஆண்டு 3.2 GW இரண்டு பயன்பாட்டு அளவு சோலார் பேனல்கள் திட்டங்கள் வீடுகள், பள்ளிகள் , மருத்துவ மனைகள் , தனியார் அலுவலகங்கள் மற்றும் வணிக கூரைகளுக்கு நிறுவப்பட்ட இருக்கின்றன. 447 மெகாவாட் மற்றும் இன்னும் 20 திட்டங்கள் மூலம், மிகப்பெரிய சோலார் தகடுகளின்தேவைகள் அதிகரித்து இருக்கிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா, அரிசோனா, மற்றும் நியூ ஜெர்சி போன்ற சில முக்கிய மாநிலங்களில் சோலார் வளர்ச்சி திட்டங்களுக்காக தனிப்பட்ட அரசு கொள்கைகள் வகுக்கப்பட்டு இருக்கின்றன. உள்ளன.
கலிபோர்னியாவில் சூரிய திறன் ஒரு கணிசமான அளவு ஏற்கனவே உள்ளது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அணு உலை, ஒரு நிலக்கரி பயன்படுத்தபடும் அனல்மின் நிலையம் ஆகியவற்றுக்கு மாற்றாக சோலார் மின்சாரம் வளர்ந்து வருவதையும், வளர்ந்தாகவேண்டிய கட்டாயத்தையும் பற்றிய ஒரு கட்டுரையை இந்த வாரம் வெளியிட்டு இருக்கிறது. சோலார் சக்தியினை பற்றிய யோசனைக்கு இதுவே ஒரு உச்ச நேரம் என்று அது வருணித்து உள்ளது.

நன்றி  மூஞ்சிப்புத்தகம்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக