சனி, 14 ஜனவரி, 2012

சுசீலா ராமன் Susheela Raman...!

பால் மணக்குது பழம் மணக்குது பழனி மலையிலே ...!




என்னப்பனே என்னையனே ...!


மகாகணபதி...!


காமாட்சி ...!



உள்ளம் உருகி இசை ...!







சுசீலா ராமன், 35 வயதாகும் தமிழ்ப்பெண். சுசீலாவின் பெற்றோர்கள் தஞ்சாவூரை சேர்ந்தவர்கள். அவர்கள் 60களில் பிரிட்டனில் குடியேறி, பிறகு சுசீலாவிற்கு 4 வயதாகும் போது ஆஸ்திரிலியாவிற்குக் குடிபெயர்ந்தார்கள். அங்கு சுசீலா கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டார். அவருடைய பதின்ம பருவத்தில் அவர் ஆஸ்திரிலியாவில் தன்னுடைய இசைக்குழுவை நிறுவினார். பிறகு அவர் ப்ளூஸ், ஜாஸ் இசைக்கு மாறியபோது, அதற்கு ஒரு தனித்துவமான குரல் பிரயோகம் தேவை என்பதை உணர்ந்தார், அதை அடைய அவர் 1995 மீண்டும் கர்நாடக சங்கீதம் பயில ஆரம்பித்தார். இந்த முறை இந்தியாவில். பிறகு இந்துஸ்தானிய இசையும் பயின்றார்.

வேற்றுக் கலாசார பின்னனியுடன், தனது பண்பாட்டின் அடிப்படை இசையை உள்வாங்கிக்கொண்டு அவர் வெளியிட்ட அத்தனை தொகுப்புகளும் ப்ளூஸ், வேர்ல்ட் மியூசிக் மற்றும் கர்நாடக இசையின் இன்னொரு முகம் என்று சொல்வதைவிட புதியதோர் கலாச்சார உலகின் நுழைவாயில் என்றுதான் சொல்ல வேண்டும்.

2001 இல் இருந்து இதுவரை 4 இசைத் தொகுப்புகள் மட்டுமே வெளியீடு செய்திருக்கிறார். சால்த் ரெய்ன் (Salt Rain), லவ் டெரப் (Love Trap), மியூசிக் பொர் க்ரொக்டைல் (Music For Crocodile) மற்றும் 33 1/3. இதில் இறுதியாக வந்திருக்கும் 33 1/3 அவருடைய தைரியமான முயற்சி என்று பிபிசியின் இசை விமர்சனம் குறிப்பிட்டுள்ளது. காரணம், இந்த இசைத்தொகுப்பில் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் புகழ்பெற்றிருந்த கலைஞர்கள்; பாடகர்கள்; இசையமைப்பாளர்களான லொவ் ரீட் (Lou Reed), போப் டைலன் (Bob Dylan), ஜோன் லெனென் (John Lennon), ஜிமி ஹெண்டீர்க்ஸ் (Jimi Hendrix), மற்றும் ஜோய் டிவிசனின் (Joy Division) ஆகியோரின் பாடல்களை சுசீலா வேறு தளத்தில் கையாண்டிருக்கிறார். மேலைக் கலைஞர்களான இவர்களது ரோக் இசையை இந்தத் தொகுப்பில் சுசீலா ஆப்பரிக்க ஆசிய இசை சங்கமங்களுடன், வேர்ல்ட் மியூசிக் வகையில் படைத்திருக்கிறார்.(இரண்டாவது பாடலில் கொஞ்சம் நமது நாட்டுப்புற இசையையும், ஒன்பதாவது மற்றும் பதினொன்றாவது பாடலில் வயலின் இசை வழியாக கொஞ்சம் கர்நாடகமும் கலந்திருக்கிறார்). இந்த தொகுப்பின் வழி அவர் தனது பழைய அடையாளமான கர்நாடகப் பாடகர் என்ற அடையாளத்தை தகர்த்திருக்கிறார். இது எனது அடுத்தக்கட்ட இசைப் பரிணாமம் என்று அவரே கூறியிருக்கிறார்.

நன்றி சொல்வனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக