விஞ்ஞானத்திற்கு சவால்விடும் பலதரப்பட்ட மர்மங்கள் உலகில் இன்றும் இருந்து கொண்டிருக்கின்றன. இந்த மர்மங்களின் முடிச்சுக்கள் அவிழ்க்கப்படாமலேயே காலச்சக்கரம் சுழன்றுகொண்டிருக்கிறது. அவ்வாறான மர்மங்களில் ஒன்றுதான் பெர்முடா முக்கோணம்.
பெர்முடா தீவு, புளோரிடா, புயேர்டோ ஆகிய பகுதிகளை இணைத்து அமைக்கப்படும் முக்கோணப்பகுதிதான் இந்த பெர்முடா முக்கோணம். இக் கடற்பரப்பினுள்ளே பெர்முடா தீவு மெக்சிகோ வளைகுடாவின் ஒரு முனை, பஹாமா தீவுகள்,அமெரிக்க நாடுகளின் மேற்கு பகுதி மற்றும் புளோரிடா ,மியாமி லாடர்லேட்முதலான துறைமுகங்களும் உள்ளடங்குகின்றன.
உலகின் முக்கியமான போக்குவரத்து வழிகளில் ஒன்றாக விளங்கும் அட்லாண்டிக்சமுத்திரத்தில் குறிப்பாக இவ் முக்கோண வலயத்தினுள் பயணிக்கும் கப்பல்களும்வானில் பறக்கும் விமானங்களும் திடீரென மறைந்துவிடுகின்றன.கப்பல்கள்,விமானங்கள் இவ்வலயத்தினுள் பிரவேசிக்கும் போது அவற்றின் கட்டுபாட்டுநிலையத்துடனான தொடர்புகளை இழந்து விடுவதுடன் அவை திடீரென காணாமல்போகின்றன. பல்வேறுபட்ட தேடுதல்கள் ,ஆராய்ச்சிகள் மேற்கொண்ட போதும்காணமல் போன கப்பல்கள் ,விமானங்கள் இன்றுவரைகண்டுபிடிக்கப்படவில்லை.அவற்றின் சிதைவுகள் கூட கிடைக்கவில்லை.
ஆய்வுகளின் படி 40 கப்பல்களையும் 20 விமானங்களையும் இவ்வலயம்மூழ்கடித்துள்ளது.1945 இலிருந்து 1000 க்கு மேற்பட்ட உயிர்களையும்காவுகொண்டுள்ளது.மேலும் ஐப்பானுக்கு அருகிலுள்ள பேய்க்கடலும் பெர்முடா முக்கோணத்துக்கும் தொடர்பிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுவதால் இம்மர்மம் மேலும் சூடுபிடித்துள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு மேலாக இவ் முக்கோணவலயத்தில் ஏற்படுகின்ற விபத்துக்கள்,மர்மமான சம்பவங்களுக்கு பல காரணங்களும்விளக்கங்களும் கொடுக்கப்படுகின்றன.அவற்றின் நம்பகத்தன்மை என்பது இன்றளவும்சந்தேகத்துக்குரியது.
கொலம்பஸ் தம் கடல் பயணத்தின் போது இவ் வலயத்தில் பல வழமைக்கு மாறானநிகழ்வுகளும் சம்பவங்களும் இடம் பெற்றதாக குறிப்பிட்டுள்ளார். இத்தகையசம்பவங்கள் வேற்றுக்கிரகவாசிகளின் செயலாக இருக்கலாம் என்றும் வெப்ப,குளிர்நீரோட்டங்களின் செல்வாக்கின் காரணமாக இத்தகைய நிகவுகள் இடம்பெறலாம் என்றும் மீதேன் ஹைட்ரேட்டுக்கள் நீரின் அடர்த்தியை குறைப்பதினால் அவற்றினால் கப்பல்களைமூழ்கச் செய்ய முடியும் என்றும் கருத்துக்கள் நிலவுகின்றன. ஆனால் இவற்றில் வெப்ப,குளிர் நீரோட்டங்களின் செல்வாக்கால் ஏற்படும் காந்தப்புலத்தால் கப்பல்களும் விமானங்களும் காணாமல் போவதை ஏற்றுக்கொள்ள முடிந்தாலும் மீதேன்ஹைட்ரேட்டுக்கள் நீரின் அடர்த்தி குறைவதால் விமானங்கள் காணாமல் போவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன் அமெரிக்காவில் நிலவியல் துறை ஆய்வியல் படிமுக்கோணப் பகுதியில் 15000 வருடங்களில் எரிவாயு ஹைட்ரேட்டுக்களின் வெளிடுகள்எதுவும் காணப்படவில்லை எனக் குறிப்பிடுகின்றனர்.இதனால் இக் கருத்து ஏற்புடையதுஅல்ல.
ஆனால் அமெரிக்கா தனது ஆடபுல எல்லைகளை தக்கவைத்துக்கொள்ள இவ்வாறான புரளியை கிளப்பி விடுவதாக கூறப்படுகிறது. ஆனால் என்னைப்பொறுத்தவரை அதுவும் வெறுமனே அமெரிக்காவிற்கெதிரான வதந்தியாகவே இருக்கும். ரஷ்யா போன்ற நாடுகள் செய்மதி தொடர்பாடல் வல்லமையுடன் இருக்கும் போது இம்மர்மம் அமெரிக்காவால் கிளப்பிவிடப்பட்ட வதந்தியாக மட்டுமே இருக்குமாயின் அதை கண்டறிவது பெரிய காரியமல்ல. ஆகவே இன்னும் இன்னும் இந்த மர்மமுடிச்சு சிக்கலாகிக்கொண்டு போகிறதே தவிர மர்மங்கள் விலகுவதாக தெரியவில்லை.
நன்றி குருஷேத்திரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக