புதன், 27 ஏப்ரல், 2011

சிறுநீரகம் யாருக்கு அதிகம் பாதிப்படையும் ?

இயற்கையின் படைப்புகள் அனைத்தும் வியக்கத் தக்கவை.  உயிரினங்களில் ஒரு செல் உயிரி முதல் மனிதன் வரை உள்ள அனைத்து படைப்புகளிலும் பல அற்புதங்கள் புதைந்துள்ளன. இதில் மனித உடலானது ஒரு மாபெரும் படைப்பாகும்.

மனித உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் இன்றியமையாதவை.  இவற்றில் சில உறுப்புகளின் செயல்பாடுகள் விரைவில் குன்றிவிடும் என்பதற்காக இரண்டு உறுப்புகளை இயற்கை வடிவமைத்துள்ளது. எடுத்துக்காட்டாக கண், காது, மூக்கு துவாரம், நுரையீரல், சிறுநீரகம் இவைகள் இரண்டு உறுப்புகளாக உள்ளன.  இப்படி மனித உடலின் இயக்கத்திற்கு உதவும் சிறுநீரகம் பற்றி இந்த இதழில் தெரிந்துகொள்வோம்.

கடவுளுக்கும் மரணம் வருமா !?

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

தமிழ்மணி - " அருள்மொழி அரசு " திருமுருக கிருபானந்த வாரியார்.

பதிப்புச் செம்மல் சி. வை. தாமோதரம் பிள்ளை

ஆய்வாளர்கள் தமிழ் நூல்கள் பதிப்பு குறித்த காலத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள்.

  • 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியை ஆறுமுக நாவலர் காலம் என்றும்
  • 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை தாமோதரம் பிள்ளையின் காலம் என்றும்
  • 20ஆம் நூற்றாண்டின் தொடக்கமான பகுதியை உ.வே.சாமிநாதய்யர் காலம் என்றும் 
அவர்கள் வகுத்துள்ளனர்.

திறனாய்வுத் துறையும் " கலாநிதி " க. கைலாசபதி



தொல்காப்பிய ஆசான் சி. கணேசையர்

தமிழின் தலைசிறந்த நூல் என்று நாம் கொண்டாடும் தொல்காப்பியம் 19ஆம் நூற்றாண்டில் தமிழ்த்தாத்தா உ.வே.சா. போன்றவர்களே அறியாத நூலாக இருந்தது. அந்தக் காலத்தில் தமிழ்நாடு முழுமையிலும் தொல்காப்பியத்தைப் பாடம் சொல்கிற ஆசிரியர் "வரதப்ப முதலியார்" என்ற ஒருவர் மட்டும் இருந்ததாக சி.வை.தாமோதரம் பிள்ளை போன்றோர் எழுதியுள்ளனர்.

1847இல் மழவை மகாலிங்கையரால் தொடக்கம் பெற்ற தொல்காப்பியப் பதிப்புப் பணி 1935இல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையால் தொல்காப்பியம் -  இளம்பூரணர் உரை

தமிழாய்வினுக்கு வித்திட்ட தனிநாயகம் அடிகளார்!

தமிழில் திறனாய்வு என்பது நீண்ட பாரம்பரியம் உடையதெனினும் புறநிலையில் ஒரு படைப்பினை நுணுகி ஆராய்தல் நூற்றாண்டுப் பழமையானது. இலக்கியப் படைப்புகளை வாசித்து அவற்றில் பொதிந்துள்ள நுட்பங்களை இரசித்து மகிழ்தலும், மேலைநாட்டுத் திறனாய்வுக் கோட்பாடுகளை வறட்டுத்தனமாகப் பிரயோகித்துத் திறனாய்வெனச் சிலாகிப்பதும் வழக்கமாக இருந்த காலத்தில், தனிநாயகம் அடிகளாரின் திறனாய்வு அணுகுமுறை தனித்துவமானது. வ.வே.சு. ஐயர், டி.கே.சி. போன்றோரின் விமர்சனம் இரசனையை அடிப்படையாகக் கொண்டிருந்தபோது, அதனைப் பல்வேறு தளங்களுக்கு விரித்தவர் தனிநாயகம் அடிகள்.

"தனித்தமிழ்த் தந்தை" மறைமலை அடிகள்.

"என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே" 

என்ற திருமூலர் வாக்கின் வழி நின்று தமிழ்த் தொண்டும் சிவத் தொண்டுமே வாழ்க்கைக் குறிகோளாகக் கொண்டு வாழ்ந்தவர் மறைமலையடிகள். அறிவுச் சுடரான இவர் தமிழே சிவமாகவும் சிவமே தமிழாகவும் வாழ்ந்தவர்.  "தென்னாடு பன்னெடுங்காலம் தன்னை மறந்து உறங்கியது. அவ்வுறக்கம் போக்கிய பெருமை மறைமலையடிகளுக்கு உண்டு. அவர் தம் தமிழ்ப் புலமையும், வடமொழிப் புலமையும், ஆங்கிலப் புலமையும், ஆராய்ச்சியும், பேச்சும், எழுத்தும், தொண்டும் தென்னாட்டை விழிக்கச் செய்தன. தென்னாடு அடிகளால் விழிப்புற்றது என்று மண்ணும் முழங்கும்; மரமும் முழங்கும்; அடிகள் பேச்சு பல பேச்சாளரைப் படைத்தது; எழுத்து பல எழுத்தாளரை ஈன்றது; நூல் பல நூலாசிரியர்களை அளித்தது. அடிகளே தென்னாடு, தென்னாடே அடிகள்", என்று பாராட்டுகிறார் தமிழ்த் தென்றல் திரு.வி.க.
 நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணியில் உள்ள நாகப்பட்டினத்துக்கு அருகே காடம்பாடியைச் சொந்த ஊராகக் கொண்ட சொங்கலிங்கம் பிள்ளை - சின்னம்மை தம்பதிக்கு 1876ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார் மறைமலையடிகள்.
 திருக்கழுக்குன்றத்து இறைவன் வேதகிரீசுவரர் அருளால் பிறந்ததால் அவருக்கு "வேதாசலம்" என்று பெயர் சூட்டப்பட்டது. பின்னாளில் தனது பெயரைத் தனித் தமிழில் "மறைமலை" என்று மாற்றிக்கொண்டார்.
 நாகப்பட்டினத்தில் உள்ள வெசுலி மிஷன் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியைப் பயின்றார். ஒன்பதாம் வகுப்பு வரைதான் படித்தார். சிறு வயதில் தந்தையை இழந்தார். பின்னர் தாயாரின் வழிகாட்டுதலால் பல நூல்களைக் கற்று பேரறிவாளராகத் திகழ்ந்தார்.

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

நயினை நாகபூசணி அம்மன் கோவில்


அன்பாயும் சிவமாயும், அருளாயும் பொலிவாயும், துன்பத்தில் இன்பமாகவும், வறுமையில் செழிப்பாகவும், பேதமையில் பேரறிவாகவும் எல்லா உயிர்களிடத்தும் கருணை கொண்டவளாகவும் விளங்குபவள் பராசக்தியாகிய அன்னை அன்னையாகப் போற்றப்படும் சக்தியானது; அண்டங்களிலுள்ள உயிர்களையெல்லாம் அரவணைத்து, அன்பு செலுத்தும் பேரருட் சக்தி என்று போற்றப்படுகின்றது.

வெள்ளி, 1 ஏப்ரல், 2011