புதன், 9 மார்ச், 2011

ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஸ்ரீ வீரபத்திர சுவாமி

நயினாதீவு - தம்பகைப்பதி
அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஸ்ரீ வீரபத்திர சுவாமி தேவஸ்தானம் பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் 24 - 03 - 2011 அன்று இடம்பெறவுள்ளது.



தம்பகைப்பதி எனும் திருத்தலத்திற் கோயில் கொண்டு, பக்தர்களின்  இடர்களைந்தும், வேண்டும் வரமெலாம் அளித்தும் , தீவகத்தின் காவல்  தெய்வமாகவும் எழுந்தருளி வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள்  சமேத ஸ்ரீ வீரபத்திர சுவாமிக்கும் , விநாயகர் முதலிய ஏனைய பரிவார  மூர்த்திகளுக்கும் நிகழும் மங்கலகரமான விகிர்திவருஷம், உத்தராயண புண்ணிய  காலமும் பங்குனித்திங்கள் 10 ஆம் நாள் (24 -03 - 2011) வியாழக்கிழமை  முற்பகல் 11 மணி 30 நிமிஷம் முதல் 1 மணி 21 நிமிஷம் வரையுள்ள மிதுன  லக்கினமும் ,அனுஷ நட்சத்திரமும் , பஞ்சமித் திதியும் , சித்தயோகமும் கூடிய  சுபமுகூர்த்தவேளையில், உத்தமோத்தம பஞ்சவிம்சதி குண்டபஷ ( 25 குண்டங்களை உள்  அடக்கிய யாகம் ) அஷ்ட பந்தன, சுவர்ண பந்தன, ஜீர்ணோத்தாரண பிரதிஷ்டா மகா  கும்பாபிஷேகம் நடைபெற எம்பெருமானின் திருவருள் பாலித்து உள்ளமையால்,  வீரபத்திர மெய்யடியார்கள் அனைவரும் அன்றைய தினமும் , அதற்கு முன் நடைபெறும்  கிரியைகளிலும் நிகழ்ச்சிகளிலும் தவறாது வருகைதந்து ஸ்ரீ பத்திரகாளி  அம்பாள் சமேத ஸ்ரீ வீரபத்திர சுவாமியின் அருள் பெற்று இன்புறுவதோடு  இப்பெரும் புண்ணிய கைங்கர்யத்திற் பங்குபற்றியும் சகல செல்வப் பேறுகளையும்  பெற்றுய்யும் வண்ணம் ஆலய அறங்காவலர் சபை வேண்டி நிற்கிறது.

எண்ணெய்க் காப்பு ( 23 - 03 - 2011 புதன்கிழமை காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை )



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக