ஞாயிறு, 5 டிசம்பர், 2010

சங்க நூல்களில் மீன்கள்

1 ) அயிலை (காணாங்கெழுத்தி)

2 )
அயிரை

3 )
ஆரல்

4 ) கயல்
(
வெண்கயல், செங்கயல், கருங்கயல்
(
காக்கா மீன்) ; குறுமுழிக் கெண்டை)
இரு கயல் மீன்கள் பாண்டியரின் அடையாளமாகச்
சங்க
காலத்திலிருந்து மிக பிற்காலம் வரை
வழங்கியிருக்கின்றன
.
பாண்டியனுக்கு 'மீனவன்' என்ற பெயரும் இதனால் வந்தது...



5 ) கெண்டை (வெண் கெண்டை, சேல் கெண்டை)

6 )
கெடிறு (கெளிறு, கெளுத்தி)

7 )
கொழு மீன் (நெய்த்தலைக் கொழுமீன்; நெத்திலி - பொருவா)

8 )
குழல் மீன் (பூங்குழல், பால்மீன், பால்கெண்டை )

9 )
நுழை மீன் (நிலம் கரைஞ்சான்)

10 )
மலங்கு ( விலாங்கு, மிராங்க, நூழை, சேற்றுப்பாம்பு)

11 )
வரால்
(
வரி வரால், வெள்ளரா; வஞ்சிரம், விரால்,
இருவிரால்
; பூவரால், குறவை)

12 )
வாளை (நன்னீர்ச் சுறா, பூனை மீன், சொட்டை வாளை)

13 )
சுறா
(
கோட் சுறா, கடுஞ்சுறா, கடுமுரண் எறி சுறா,நிணச்சுறா, ஓங்கில்சுறா; பெருமீன்,வள்ளுவன் சுறா, பிள்ளைச்சுறவு; பால்சுறா)
{ ஆற்றுச்சுறா, நீலச்சுறா; கொப்புளிச் சுறா, குண்டன் சுறா, கூர சுறா,
திமிங்கிலச் சுறா }

14 )
கோட்டு மீன்
(
கொம்பன் சுறா, சம்மட்டித் தலையன் சுறா (ஆங்கிலத்தில்),
நெட்டைக் கொம்பன் சுறா, குட்டைக்கொம்பன் சுறா, கட்டைக்கொம்பன் சுறா, மண்வெட்டிச் சுறா)

15 )
வாள் சுறா
(
வாட் சுறா, வாள்வாய்ச் சுறவு, வேளா சுறா, தண்டச் சுறவு
இம் மீனின் வாளைப் பரதவர் நட்டு வணங்கியதை பட்டினப்பாலை கூறியுள்ளது.
வாள் சுறாவையே மகரம் என அழைத்துள்ளனர்.

16 ) இறா ( சேயிறா, பெருஞ்சேய் இறா, வெள்ளிறா, பச்சிறா, மோட்டிறால், கூர்நல்லிறா )


17 ) சிறு மீன் ( ஐய், சிறுகண் செங்கடை, கண்ணிக் குறியன் )


18 ) பெரு மீன் ( திமிலம்; திமிங்கிலம், யானை மீன், பனை மீன்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக