எனக்கென்றோர் தனிவரம் யான் கேட்கவில்லை
என்இனத்தார் வாழ்வொன்றே கருதவில்லை
உனக் கெல்லா உயிர்களுமே சொந்தமென்ற
உண்மையை நான் ஒருபோதும் மறந்ததில்லை
சினங்கொண்டு தீங்கிழைக்கும் தீயர் தாமும்
சீலமுறவேண்டுமென்றே வேண்டுகின்றேன்
தனக்கொருவ ரொப்பில்லாத் தாயே ! இந்தத்
முந்நாளில் முருகனுக்குச் சக்தி யீந்தாய்
முனிவர்க்குந் தேவர்கட்கும் முதன்மை யீந்தாய்
பிந்நாளில் சங்கரர்க்கும் பெருமை யீந்தாய்
பெரின்பக் காதல் வளம்பெருக வைத்தாய்
இந்நாளில் இராமக்கிருஷ்ணர் ரமணர் போன்ற
இணையற்ற ஞானியரை உலகுக் கீந்தாய்
இட்டைச் சொந்த மென்றும் இருஇனத்தார்
இணங்கி வாழ்ந்திடச் செய்தல் அரிதோ அன்றாய் ?
அருளுவாய் அனைத்துயிர்க்கும் அன்னையாகி
ஐந்தொழில்கள் புரிஆதி சக்தியேநின்
கருணையின்றி கணக்கில்லாக் கஷ்ரமுற்றுக்
கதறிநிற்கும் உயிர்களுளத் தின்றுசூழ்ந்த
இருளகல வழியேதும் இல்லையென்ற
ஈடற்ற உறுதியுடன் இந்த ஏழை
உருகிநின்றுன் சந்நிதியில் கேட்டயாவும்
உவந்தளிப்பதுன் கடனாம் ஒப்பில் தாயே !
நயினை க. இராமச்சந்திரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக