திங்கள், 21 நவம்பர், 2011

ஹிட்லர் தற்கொலை செய்யவில்லை .,!?


சர்வாதிகாரி ஹிட்லர் 1945ஆம் ஆண்டில் பெர்லின் நகரில் தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும் அவர் ஆர்ஜென்டீனாவில் இறுதி நாட்களை கழித்த நிலையில் இயற்கை மரணம் எய்தியதாகவும் புதிய புத்தகமொன்று உரிமை கோருகிறது.

ஞாயிறு, 20 நவம்பர், 2011

புற்றுநோயைக் குணப்படுத்தும் அதிசய மருந்து கண்டுபிடிப்பு.

புற்றுநோயைக் குணப்படுத்தும் அதிசய மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மருந்து இன்னும் சில கொடிய வியாதிகளைக் குணப்படுத்த வல்லதாம்.

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் தலைமையிலான சர்வேதச விஞ்ஞானிகள் அடங்கிய குழு புற்றுநோய் செல்களை அழிக்க மருந்து கண்டுபிடித்துள்ளனர். கேஜி5 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த மருந்து புற்றுநோய் செல்களை முற்றிலும் அழித்துவிடும் திறன் கொண்டது. மேலும் கட்டி ஏற்படுத்தும் செல்களை பெருகவிடாமல் அழி்க்கும் என்று நேச்சுரல் மெடிசின் என்ற பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

வியாழன், 17 நவம்பர், 2011

மொரீசிய நாட்டின் ரூபாய் தாளில் தமிழ் எழுத்துக்கள்...!

மொரீசிய நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் இடம் பெற்றிருக்கின்றன.
கன்னட, தெலுங்கு, மராட்டிய மக்கள் தங்களுடைய எண்களை மறக்காமல் பேருந்துகளிலும், அரசுத்துறைகளிலும் பயன்படுத்துகிறார்கள்.
எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசிய அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.
மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த தமிழ் எழுத்துக்களையும், எண்களையும் படத்தின் மூலம் காணலாம்.

ஞாயிறு, 13 நவம்பர், 2011

நாம் நகை அணிவது ஏன்? எதற்கு? ...!

அரைநாண் கொடி அணிவது ஏன்?

உடலுக்கு நடுப் பகுதி இடுப்பு. மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக ஒடும் இரத்தம் இடுப்புக்கு வரும்போது சம நிலைக்கு கொண்டு வர இந்த அரை நாண் கொடி உதவுகிறது.
மகாபாரத்தில் திருதாஷ்திரன் தன் மகன் துரியோதனன் போருக்கு போகுமுன் தலையிலிருந்து தொட்டு ஆசீர்வாதம் செய்து, வழங்கி வரும் போது இடுப்புக்கு வந்தவுடன் துரியோதனன் கட்டியிருந்த அரைநாண்கொடியால் இடுப்பு க்கு கீழ் ஆசீர்வாதம் வழங்க முடியவில்லை. பின் துரியோதனன் தொடை பிளந்து இறந்த கதை எல்லோரும் அறிந்ததே. இந்த அரை நாண்கொடி உடல் பாதுகாப்பு க்கும் பயன்படுகிறது

மெட்டி அணிவது ஏன்?