தமிழில் திறனாய்வு என்பது நீண்ட பாரம்பரியம் உடையதெனினும் புறநிலையில் ஒரு படைப்பினை நுணுகி ஆராய்தல் நூற்றாண்டுப் பழமையானது. இலக்கியப் படைப்புகளை வாசித்து அவற்றில் பொதிந்துள்ள நுட்பங்களை இரசித்து மகிழ்தலும், மேலைநாட்டுத் திறனாய்வுக் கோட்பாடுகளை வறட்டுத்தனமாகப் பிரயோகித்துத் திறனாய்வெனச் சிலாகிப்பதும் வழக்கமாக இருந்த காலத்தில், தனிநாயகம் அடிகளாரின் திறனாய்வு அணுகுமுறை தனித்துவமானது. வ.வே.சு. ஐயர், டி.கே.சி. போன்றோரின் விமர்சனம் இரசனையை அடிப்படையாகக் கொண்டிருந்தபோது, அதனைப் பல்வேறு தளங்களுக்கு விரித்தவர் தனிநாயகம் அடிகள்.
செவ்வாய், 19 ஏப்ரல், 2011
தமிழாய்வினுக்கு வித்திட்ட தனிநாயகம் அடிகளார்!
லேபிள்கள்:
தமிழ்
"தனித்தமிழ்த் தந்தை" மறைமலை அடிகள்.
லேபிள்கள்:
தமிழ்
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே"
என்ற திருமூலர் வாக்கின் வழி நின்று தமிழ்த் தொண்டும் சிவத் தொண்டுமே வாழ்க்கைக் குறிகோளாகக் கொண்டு வாழ்ந்தவர் மறைமலையடிகள். அறிவுச் சுடரான இவர் தமிழே சிவமாகவும் சிவமே தமிழாகவும் வாழ்ந்தவர். "தென்னாடு பன்னெடுங்காலம் தன்னை மறந்து உறங்கியது. அவ்வுறக்கம் போக்கிய பெருமை மறைமலையடிகளுக்கு உண்டு. அவர் தம் தமிழ்ப் புலமையும், வடமொழிப் புலமையும், ஆங்கிலப் புலமையும், ஆராய்ச்சியும், பேச்சும், எழுத்தும், தொண்டும் தென்னாட்டை விழிக்கச் செய்தன. தென்னாடு அடிகளால் விழிப்புற்றது என்று மண்ணும் முழங்கும்; மரமும் முழங்கும்; அடிகள் பேச்சு பல பேச்சாளரைப் படைத்தது; எழுத்து பல எழுத்தாளரை ஈன்றது; நூல் பல நூலாசிரியர்களை அளித்தது. அடிகளே தென்னாடு, தென்னாடே அடிகள்", என்று பாராட்டுகிறார் தமிழ்த் தென்றல் திரு.வி.க.
நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணியில் உள்ள நாகப்பட்டினத்துக்கு அருகே காடம்பாடியைச் சொந்த ஊராகக் கொண்ட சொங்கலிங்கம் பிள்ளை - சின்னம்மை தம்பதிக்கு 1876ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார் மறைமலையடிகள்.
திருக்கழுக்குன்றத்து இறைவன் வேதகிரீசுவரர் அருளால் பிறந்ததால் அவருக்கு "வேதாசலம்" என்று பெயர் சூட்டப்பட்டது. பின்னாளில் தனது பெயரைத் தனித் தமிழில் "மறைமலை" என்று மாற்றிக்கொண்டார்.
நாகப்பட்டினத்தில் உள்ள வெசுலி மிஷன் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியைப் பயின்றார். ஒன்பதாம் வகுப்பு வரைதான் படித்தார். சிறு வயதில் தந்தையை இழந்தார். பின்னர் தாயாரின் வழிகாட்டுதலால் பல நூல்களைக் கற்று பேரறிவாளராகத் திகழ்ந்தார்.

திங்கள், 18 ஏப்ரல், 2011
தமிழ் மொழி வாழ்த்து
லேபிள்கள்:
முத்தமிழ்
செவ்வாய், 12 ஏப்ரல், 2011
சங்கத்தமிழ் என்றால் என்ன ? (1)
லேபிள்கள்:
முத்தமிழ்
சங்கத்தமிழ் என்றால் என்ன ? (2)
லேபிள்கள்:
முத்தமிழ்
வெள்ளி, 8 ஏப்ரல், 2011
நயினை நாகபூசணி அம்மன் கோவில்
லேபிள்கள்:
நயினாதீவு
வியாழன், 7 ஏப்ரல், 2011
தமிழன்
லேபிள்கள்:
தமிழர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)