ஆதரவற்றோருக்கு பற்றுக்கோடாகத் திகழ்ந்த அன்னை தெரசா, மனிதக் குலத்துக்குக் கிடைத்த பேரருளாளராகப் போற்றப்படுகிறார்.
கல்கத்தாவின் தெருக்களில் ஒதுக்கப்பட்டிருந்த வறியவர்களையும், கவனிப்பாரின்றிக் கிடந்தவர்களையும் அரவணைத்து, அன்போடு தொண்டாற்றினார். தொண்டின் மறு உருவம் தெரசாவுக்கு 1979-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது...
சினிமா நமக்குக் காட்டாத பல அரிய கவிதைகளைத் தமிழ் உலகுக்கு தந்திருக்கிறார் அந்த அமரகவி. அவர்தான் மீசைக் கவிஞன் என்றும் முண்டாசுக் கவிஞன் என்றும் தமிழ் இலக்கியஉலகம் போற்றும் மகாகவி பாரதியார்...
யாழ் பல்கலைக்கழக இந்துநாகரிகத் துறையில்
பேராசிரியர் ஆகிறார் திரு. மாரிமுத்து வேதநாதன் அவர்கள் ;
இவர் தற்போது யாழ் பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறைத் தலைவராக உள்ளார். திரு. வேதநாதன் நயினையின் புதல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்!